பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அனுபவமில்லாத மருத்துவர் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்காக சென்றிருக்கிறார். அங்கு பெண் மருத்துவர்கள் இல்லாததால் அனுபவம் இல்லாத பணியாளர் ஒருவர் அந்த பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அப்போது, குழந்தையை வெளியே எடுத்தபோது அதன் தலை துண்டிக்கப்பட்டு தனியாக வந்துள்ளது. அந்தப் பணியாளர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையின் தலையை மீண்டும் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டு விட்டார். இதனால் அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
உடனே அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு கர்ப்பப் பையில் இருந்த குழந்தையின் உடலை நீக்கி அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவத்தில் வேலை நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது.