வீட்டு கடன் வழங்கக் கூடிய நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. வீட்டுக் கடன்கள் மீதான அடிப்படை வட்டி விகிதம் 0.60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும், மாதந்தோறும் செலுத்தக் கூடிய EMI தாயும் உயரக்கூடும். இந்த வட்டி உயர்வு ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதம் முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் சிபில் ஸ்கோர் 700 க்கு மேல் இருக்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த விகிதத்தில் வீட்டுக் கடன்களை வாங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 600 முதல் 699 வரை சிபில் ஸ்கோர் கொண்டவர்கள் அனைவருக்கும் வீட்டு கடன்களுக்கு 8% வட்டி விதிக்கப்படும். 600க்கு கீழே சிபில் ஸ்கோர் உள்ளவர்களுக்கு 8.25 சதவீதம் வீட்டு கடன்களுக்கு வட்டி விதிக்கப்படும். ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இந்த மாதம் உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதத்தை தொடர்ந்து உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.