நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புபவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். இதில் பயணச் செலவும் குறைவு என்பதாலும் சௌகரியமாக பயணம் செய்ய முடிவதால் ரயில் பயணங்களை அதிகம்பேர் விரும்புகிறார்கள். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது . அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் புக்கிங் செய்யும் போது விரும்பிய சீட் உங்களுக்கு கிடைப்பது சிரமம்தான்.
அதிக அளவிலான பயணிகள் ரயிலில் புக்கிங் செய்வதால் பெர்த்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் சில சமயங்களில் ஏதாவது ஒரு பெர்த் கிடைக்கும். இருந்தாலும் பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் (படுக்கை) தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதன்படி மிடில் பெர்த்தில் தூங்கும் பயணிகள் சில நேரங்களில் ரயில் கிளம்பியவுடன் அதனை திறந்து விடுவார்கள். அதனால் கீழுள்ள படுக்கையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
எனவே ரயில்வே விதிமுறைகளின்படி மிடில் பெர்த்தில் இருக்கும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அதில் உறங்க முடியும். அந்த நேரத்தை தாண்டி தூங்கினாள் மற்ற பயணிகள் அதை தடுக்கலாம். அதனைப் போலவே காலை 6 மணிக்கு பின்னர் மற்ற பயணிகள் கீழ் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பெர்த் மடக்கி விட வேண்டும். அதேசமயம் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் உறங்கிய பிறகு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. டிக்கட் பரிசோதகர் அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய முடியாது. இருந்தாலும் இரவு 10 மணிக்கு மேல் பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு இந்த விதிமுறை எதுவும் பொருந்தாது.