Categories
அரசியல்

“அக்னிபாத் திட்டம்” மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு நாட்டிலுள்ள பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அக்னிபாத் திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் நியாயமானது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நாம் தமிழர் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு நாம் தமிழர் கட்சியும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |