Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 02.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

02-02-2020, தை 19, ஞாயிற்றுக்கிழமை,

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 ,

மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

இன்றைய ராசி பலன்கள் 

 

மேஷம்

இன்று பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்தடையும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உங்களின் அறிவு ஆற்றலால் தொழில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும் இன்று எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. பிள்ளைகள் வீண் செலவுகளை உண்டாக்குவார்கள். பெண்களுக்கு வீட்டில் வேலை சிறிது அதிகமாக இருக்கும். குடும்ப பிரச்சினையில் உறவினர் மூலம் நன்மை நடக்கும். தொழிலில் உள்ள மந்தமான சூழல் சற்று மாற்றம் பெறும்.

மிதுனம் 

இன்று மனதில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சிலருக்கு வேலை அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் தகவல் இல்லம் வந்து சேரும். திருமணம் போன்ற சுப முயற்சிகள் தொடங்க நல்ல நாள் ஆகும். இன்று பிள்ளைகள் மூலம் பெருமை அடைவீர்கள்..

கடகம்

இன்று உங்களுக்கு உடல் நலம் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் அகன்று சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த வேலைகளை இன்று விரைவில் முடிவடையும். எதிர்பார்த்திருந்த உதவிகள் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாகவே இன்று இருக்கும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் ஆச்சர்யமிக்க சுப நிகழ்வுகள் நடந்தேறும். உறவினர்கள் மூலம் நன்மை நடக்கும். சிலர் பொன் மற்றும் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இன்று இருக்கும். இன்று பிள்ளைகள் விருப்பப்பட்ட  ஒன்றை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு இன்று சிறப்பானதாக இருக்கும்

கன்னி

இன்று இல்லத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். வயதில் பெரியவர்களின் மன அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் அடுத்தவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை குறைப்பது நன்று. வெளியூர் செல்லும் முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம்.

துலாம்

இன்று இல்லத்தில் மகன் வழியில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த இடத்தில் உதவிகள் கிடைக்கப்பெறும். உடன் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் இருந்த தடை முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். இன்று கொடுத்து கடன் அனைத்தும் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று பண வரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் இல்லம் தேடி வரும். செலவுகள் இன்று குறைவடையும்.

தனுசு

இன்று அனைத்து காரியத்தையும் தாமதமாகவே செய்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடங்கல்கள் சில ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படும். தொழில் மூலமாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

மகரம்

இன்று தொழிலில் சற்று மந்தமான நிலை தென்படும். பயணங்கள் மூலம் அலைச்சல் இருக்கும். புதிய பொருள் வாங்குவதில் நாட்டம் செல்லும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தங்கள் அகலும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இன்று கைகூடும். பழைய பாக்கிகள் முழுதும் வசூலாகும்.

கும்பம்

இன்று அனைத்து செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சி அனைத்துமே இன்று வெற்றியை கொடுக்கும். மகிழ்ச்சியான சூழல் உருவாகும் புதிய செயல்களை ஆரம்பிக்க இன்று நல்ல ஒரு நாள் ஆகும். அதுமட்டுமின்றி இன்று தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

மீனம்

இன்று தொழிலில் பங்குதாரர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். திடீர் செலவுகள் தோன்றி சேமிப்பு தொகை குறையும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பணப் பிரச்சனை குறையும். எதையும் சிந்தித்துச் செயலாற்றுவது சிறந்தது.

Categories

Tech |