Categories
அரசியல்

சர்வதேச யோகா தினம்: இன்று மைசூரில்….. “15,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி”…..!!!

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் இன்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார்.

மனித நேயத்துக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டில் சர்வதேச யோகா தினம் பல புதுமைகளை படைக்க உள்ளது. கார்டியன் ரிங் எனப்படும் சுற்றுவட்ட முறையிலான யோகா நடைபெற உள்ளது. கார்டியன் ரிங் என்பது உலகிலுள்ள 16 வெவ்வேறு கால மண்டலங்களில் சூரிய உதயத்தை கணக்கில்கொண்டு சுற்றுவட்ட முறையில் யோகா செய்முறை விளக்கம் நடத்தப்பட உள்ளது என்பதை குறிக்கின்றது. இந்த நிகழ்ச்சி முழுமையையும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் காலை 3:00 மணி முதல் இரவு 10 மணி வரை நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு பாரம்பரிய சின்னங்கள் இடம்பெற்றுள்ள நகரங்களில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைம், தஞ்சாவூர் பெரிய கோவில், மகாபலிபுரம் கடற்கரை போன்றவற்றில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோவையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

Categories

Tech |