தண்ணீரில் மிதந்து யோகா செய்யும் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கினாம்பட்டி நகரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியையான கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கீதா தண்ணீரில் மிதந்தபடி பாத ஆசனம், பத்ம கோபுர ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது. நான் கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இதனால் உடல் வலி இருக்காது . மேலும் 21 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா செய்வதற்கான பயிற்சி செய்து வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.