நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும்நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நயன்தாரா திருமணம் கடந்த வாரம் மகாபலிபுரத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதலில் இவர்கள் திருமணம் திருப்பதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால் மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. ரஜினிகாந்த் மற்றும் ஷாருக்கான் தொடங்கிய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு கொச்சி சென்ற நயன்தாரா , விக்னேஷ் சிவன் தம்பதியினர் தற்போது தாய்லாந்துக்கு ஜோடியாக ஹனிமுன் சென்றுள்ளனர். இவர்களது திருமணம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றதால் எந்த ஒரு புகைப்படங்களும் இணையத்தில் வெளியிடப்படவில்லை. தற்போது திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அவ்வகையில் தற்போது திருமணத்தில் எடுத்த குரூப் போட்டோ ஒன்றை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். இவர்களால்தான் தங்களது கல்யாணம் நல்லபடியாக நடந்தது என்று குறிப்பிட்டு எங்கள் திருமணத்தை ஆண்டாண்டுக்கு நினைவு கூறத்தக்க ஒன்றாக மாற்றியதற்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் அதில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் திருமண ஏற்பாட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.