Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! கமல்ஹாசனுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்…. எங்கு தெரியுமா….???

கொல்கத்தாவில் கிதிர்பூர் நகரில் இருக்கும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு கோவில் ஒன்றை கட்டி வருகிறார்கள். விக்ரம் வெளியாவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தக் கோவில் விக்ரம் வெற்றி பெற்றதும் கட்டுமானப்பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு கடிதம் மூலம் அழைப்பும் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொல்கத்தா ரசிகர்கள் கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடவுள் மறுப்புக் கொள்கையில் ஊறிப்போன கமல்ஹாசன் தனக்காக கட்டப்பட்டு வரும் கோவிலை திறந்து வைக்க கொல்கத்தா செல்வாரா? என்பது கேள்விக்குறி தான்.

Categories

Tech |