நடிகை சாய்பல்லவி ஊட்டியைஅடுத்த கோத்த கிரியில் கடந்த 1992 மே9-ம் தேதியன்று பிறந்தார். இவர் கோயம்புத்தூரிலுள்ள ஆல்வின் கான்வென்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படிப்பை முடித்தார். இதையடுத்து அவர் ஜார்ஜியாவிலுள்ள டிபிலிசி ஸ்டேட் யூனிவர்சிட்டியில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனிடையில் சிறுவயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், தீ 5, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா ஆகிய தென்னிந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்.
கடந்த 2008-ஆம் வருடம் சாய் பல்லவி தாம் தூம் திரைப்படத்தில் கங்கனாவின் தோழியாக ஒரு சீனில் தோன்றுவார். அதன்பின் 2015-ஆம் வருடம் வெளியாகி தென்னிந்திய மொழி திரைப்படங்களுள் பெரும் வெற்றி பெற்ற “பிரேமம்” படம் மூலம் நிவின் பாலிக்கு ஜோடியாக 3 கதாநாயகிகளுள் ஒருவராக அறிமுகமான சாய்பல்லவிக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது.
அதன்படி ஒரே படத்தில் ஓஹோ என ஹிட் அடித்தவர் சாய்பல்லவி. இவர் பிரேம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் முதல் படத்திலேயே தன் வசப்படுத்தினார். அலட்டல் மேக்கப், ஓவர் ஆக்டிங் இல்லாமல், நீண்ட தலைமுடி உதட்டோரம் எப்போதும் பளீச் புன்னகை என பாந்தமான அழகுடன் பக்கத்து வீட்டுப் பெண் போல் வலம் வருகிறார் சாய் பல்லவி.