Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பாரத் பந்த்…. 500 ரயில்கள் ரத்து…. எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பாக பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 500 ரயில்களை மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ரயில்வேக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உத்திரபிரதேச மாநிலம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |