Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு…. பிரபல நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வேதனையளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்து இருக்கிறார். முப்படைகளில் 4 வருடம் குறுகியகால சேவை அடிப்படையில் 17.5 வயது – 21 வயதுக்கு உட்பட்ட இளம்வீரர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு சென்ற 14ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 75 % பேர் 4 வருடத்திற்கு பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படமாட்டாது. இதன் காரணமாக அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் ரயில்களை எரித்து வன் முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதனிடையில் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அக்னி பாதை திட்டத்தை வரவேற்று மஹிந்திரா குழுமம் தலைவர் ஆனந்த்மஹிந்திரா கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,  “அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான வன்முறையால் வருத்தமடைந்தேன். அக்னி வீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள், அவர்களை சிறந்த வேலைவாய்ப்புக்கு ஏற்றவர்களாக மாற்றும். அத்தகைய பயிற்சிபெற்ற, திறமையான இளைஞர்களை பணி அமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது. கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தலைமைத்துவம், குழுவாக செயல்படுதல் மற்றும் உடல்பயிற்சி போன்றவற்றுடன் அக்னி வீரர்கள் தொழில்துறைக்கு தயாரான தொழில் முறை தீர்வுகளை வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |