‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
உலகளவில் பிரபலமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படம், 2001ஆம் ஆண்டு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சி, கார் ரேஸ் என்று அதிரடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்புப் பெற்றது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஒன்பதாவது பகுதி, எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ‘வின் டீசல்’ டாமினிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் எட்டாவது பகுதியில் வின் டீசல் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படங்களின் பகுதிகளை ராப் செனா, ஜான் சிங்கல்டன், ஜேம்ஸ் வான், கேரி க்ரே ஆகியோர் இயக்கியிருந்த நிலையில் ‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தை ஜஸ்டின் லின் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கார் ரேஸிங், ஆக்ஷன் காட்சி என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ள ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Not all blood is family. Watch the trailer for #F9 and get your tickets now – in theaters May 22! https://t.co/W9rR5NgTOH pic.twitter.com/LeFmC1njS0
— The Fast Saga (@TheFastSaga) January 31, 2020