சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் அவருக்கு சிறிது காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், லேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன். இன்றும் நாளையும் ஓய்வெடுத்து விட்டு அதன் பின் எப்போதும் போல பணியைத் தொடர்வேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு. பேரன்பின் பலம் கொண்டு இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.