பிரபல நடிகை அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் த்ரிஷாவின் சக நடிகையான நயன்தாராவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதன் காரணமாக 40 வயதை நெருங்கும் நடிகை திரிஷாவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் திரிஷா திருமணம் பற்றி யோசிக்காமல் அரசியலில் களமிறங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் நடிகை திரிஷா ஒரு தேசிய அளவிலான கட்சியில் இணைய உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகை திரிஷா அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.