மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவசமாக பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டது. தற்போது அடுத்த அரையாண்டிற்கான டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பாரிமுனை, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி, வடபலனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம், பூந்தமல்லி, பெரம்பூர் பேசின் பாலம், வள்ளலார் நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, திருவெற்றியூர் உள்ளிட்ட இடங்களில் நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்த டோக்கன்களை பெற விரும்பும் சென்னைவாழ் மூத்த குடிமக்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அட்டை, 2 கலர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும் எனவும், மேலும் தகவல்களை பெற மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.