இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.50 லட்சம் இடங்கள் வருடம் தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. மாணவர்கள் https://www.tneaonline.org/என்ற இணையதளம் மூலமாக ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டு மாணவர்கள் வசதிக்காக அவர்கள் படித்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.