நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு CUET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் செய்வோரும் இந்த தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்கலாம். ஜூலை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 13 மொழிகளில் கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வுக்கு (CUET) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 18 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது ஜூலை 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி விருப்பமுள்ள தேர்வர்கள் வருகின்ற ஜூலை 4-ஆம் தேதி வரை www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 011-40759000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.