Categories
மாநில செய்திகள்

EPSஐ தாக்கி OPS அதிரடி….. தட்டி தூக்க ‘பிளான்’….. நாளிதழில் மாஸாக வெளிவந்த கட்டுரை….!!!!

தமிழகத்தில் கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்ற விவாதம் பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த கட்சியில் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோஷம் இட்டு வருகின்றனர். இன்று 6வது நாளாக இருவரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய சாதனைகளை நாளிதழில் இரண்டு பக்கங்களுக்கு ஓபிஎஸ் விளம்பரப்படுத்தி உள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற தலைப்பில் இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளார்.  குறிப்பாக உழைப்பு, இயக்கத்தின் மீது உள்ள விசுவாசம், தலைமையிடம் கொண்டுள்ள பற்று காரணமாக உயர்ந்தவர் ஓ பன்னீர்செல்வம் என்று ஜெயலலிதா தன்னை பற்றி கூறியதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |