Categories
மாநில செய்திகள்

“நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் திமுக பச்சைத்துரோகம்”….. சீமான் கண்டனம்….!!!!

நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம் என சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் சிக்குண்டு இருக்கும் அக்கா நளினி மற்றும் தம்பி ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதமானது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தருகிறது.

தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற வழக்கில், ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவரென்றும், இவ்விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவரோ, ஒன்றிய அரசோ முடிவெடுக்க எவ்வித அதிகாரமுமில்லையென்றும் தீர்ப்பு வழங்கி, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், அத்தீர்ப்புக்கு முரணாகவும், விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழக அரசு வாதிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

தனது துரோகங்களை திமுக அரசு இனியும் தொடருமானால், தமிழகமெங்கும் விடுதலைக்கான பெரும் மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் திமுக அரசின் கோர முகத்தை முழுவதுமாக அம்பலப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |