Categories
உலக செய்திகள்

சர்வதேச யோகா தினம்…. வாஷிங்க்டன் நினைவகத்தில் யோகா பயிற்சிகள்..!!!

அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நினைவகத்தில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்தோடு யோகா பயிற்சிகளை செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று ஐ.நா அறிவித்ததை தொடர்ந்து 2015 ஆம் வருடத்திலிருந்து உலக நாடுகள் முழுக்க சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் இணையதளம் மூலமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த வருடம் சுமார் 70 நாடுகளில் காலை 6 மணியில் ஆரம்பித்து, கூட்டு யோகா பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் யோகாசன நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மத்திய மந்திரிகள், சினிமா நட்சத்திரங்கள் போன்ற பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் உயரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச யோகா தினத்திற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நினைவகத்தில் இந்திய தூதரகம் யோகா பயிற்சிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் பெரும்பாலான மக்கள் பங்கேற்று யோகாசனங்களை செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |