உக்ரைன் மீது ரஷ்யா 116 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை பாதுகாத்த இரண்டு உயர் உக்ரைனிய தளபதிகள் விசாரணைக்காக ராஷ்யாவிற்கு மாற்றப்பட்டதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு எதிராக ரஷியாவின் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று நோட்டாவின் ஸ்டோல்டன்பெர்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நோட்டா பொதுச்செயலாளர் ஜேபர்க் ஸ்டோல்டன்பெர்க் கூறியது, உக்ரைனிய ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுவதால், உக்ரேனில் போர் பல ஆண்டுகள் நீடிக்கும். எனவே நாம் அதற்காக தயாராக வேண்டும். உக்ரைனை ஆதரிப்பதை நாம் விட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிராந்திய நிறுவனத்தின் தலைவர் ஒருவர் கூறியது, 3 ரஷ்ய ஏவுகணைகள் கிழக்கு உக்ரைனிய நகரமான நோவோமோஸ்கோவ்ஸ்கில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கை நேற்று அழித்தது. மேலும் இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பாம்பு தீவிற்கு ஆயுதங்களை கொண்டு சென்று ரஷ்யா கப்பல் மீது ுக்கிரை நினைவுகளே தாக்குதல் நடத்தியது இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ரஷ்ய கப்பல் அளிக்கப்பட்டது மேலும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் கடலில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து உக்ரைனில் லூகன்ஸ் மாகாணத்தில் உள்ள செரோடோன்ஸ்க் நகரில் உச்சபட்ச சண்டை நீடித்து வருகிறது. இந்த போரில் செவ்ரொடோன்ஸ்க் நகரில் சண்டையிட ரஷ்யா அதிக அளவில் ரிசர்வ் படைகளை அனுப்பி வைத்துள்ளது.