பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் விஜய் தன் 66வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கிவருகிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பிறகு சென்னை கானாத்தூர் அருகில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். அந்த படப்பிடிப்பை காண ரசிகர்களும், அந்த பகுதியிலுள்ள பொதுமக்களும் திரண்டு வந்தனர்.
இதனிடையில் படத்தின் கதைகளம் மற்றும் விஜய் தோற்றத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். எனினும் யாரோ திருட்டுத்தனமாக படப்பிடிப்பிலிருந்து விஜய் தோற்றத்தை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதன்பின் படப்பிடிப்பு அரங்கு புகைப்படமும் வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் போக முடியாத ஐதராபாத்திலுள்ள திரைப்பட நகருக்கு மாற்றியுள்ளனர்.