Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்…. வேலை குறித்து ஆதங்கம்…. பரிசீலிக்குமா அரசு….!!!

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு  எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டில் உள்ள காத்மண்டுவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 11-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்பவர் இருக்கிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதால் அப்பா அலிக்கு  எம்.பி நவாஸ்கனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாஸ் அலி கூறியதாவது, எம்.பி நவாஸ்கனி பொருளாதார ரீதியாக நேபாளம் மற்றும் பங்காளதேஷ் நாட்டிற்கு செல்ல உதவினார் என்றார்.

இதனையடுத்து இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியில் விளையாடும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எந்த ஒரு ஊக்கத்தொகையும், சம்பளமும் வழங்கப்படுவதில்லை என்றார். இதன் காரணமாக பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே தமிழக அரசு அரசு வேலை வழங்கினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார். இவர்  110 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை தமிழகத்தில் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |