Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து…. பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா பெருந் தொற்றுக்கு 2 கட்ட தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டாலும் கூட தொடர்ந்து தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மூக்கின் வழியாக செலுத்தும் மருந்தை 18 வயது முதல் 60 வயது வரை இருப்பவர்களுக்கு போடலாம். இதில் இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், மனிதர்களுக்கு மூன்றாம் கட்ட பரிசோதனையை செய்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி 900 பேருக்கு மூக்கின் வழியாக மருந்து  செலுத்தப்பட இருக்கிறது. இந்த மருந்தை அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த மருந்திற்கு தேவையான ஆதரவை மத்திய உயிர் தொழில் நுட்பத்துறை மற்றும் உயிர்‌ தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி கவுன்சில் சேர்ந்து வழங்குகிறது.

Categories

Tech |