தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகள் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கொரோனா தொற்றுஅறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு உடனே தெரிவிக்க வேண்டும். இதனை செய்ய தவறினால் பேரிடன் பொது சுகாதார சட்டம் மற்றும் சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919- இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.