Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில்…. 9.16 லட்சம் புகார்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

மின்சார வாரியத்தில் பெறப்பட்டுள்ள புகார்கள் குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மின்னகம் சேவை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் மின் தொடரமைப்பு கழகத்தில் உள்ள மின்னகத்தை மின்சாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் மின்சார வாரியத்தில் 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றார். இதில்‌ 9.11 லட்சம் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் புகார்கள் வந்தால் கூட அதை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்றும், இணையதளம் மூலமாக பெறப்படும் புகார்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் படுகிறது என்றார். அதன் பிறகு வட சென்னையில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தின் மூன்றாம் கட்ட பணிகள் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் மூன்று நாட்கள் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது எனவும் அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டது எனவும் கூறினார். மேலும் கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக லண்டன் மற்றும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழு செல்கிறோம் என்றார்.

Categories

Tech |