நடிகை திரிஷா விரைவில் அரசியலில் இணைய உள்ளதாகவும்,இதற்காக தேசிய கட்சி ஒன்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புள் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவிரைவில் ஒரு பெரிய தேசிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் அது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை இவர் அரசியலில் என்று கொடுத்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா அல்லது முழுக்கு போடுவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.