Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தேர் திருவிழா…. பக்தர்களுக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தேர் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 13-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென தேர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த மனோகரன், சரவணன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

மேலும் காயமடைந்த 4  பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெருமாள் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |