Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற ஏக்கம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆனந்தபத்மநாபபுரம் மேலத்தெருவில் தொழிலாளியான முருகவேல்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சவர்ணம் முருக வேலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகவேல் மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகவேல் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முருகவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |