Categories
மாநில செய்திகள்

அதிகாரிகளுக்கும் அல்வா… மக்களுக்கும் அல்வா… கமல் ஹாசன் கிண்டல் ட்விட்..!!

மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார். அதில் “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |