Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி”….. போக்குவரத்து நெரிசல்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணியானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் நகரில் தேரோடும் நான்கு வீதிகளை தவிர மற்ற அனைத்து சாலைகளுமே சிறியதாக இருக்கின்றது. இந்த இடங்களில் தான் காய்கறி, மளிகை கடை. துணிக்கடை, நகைக்கடை என அதிக கடைகள் இருக்கும் கடை வீதியாக இருக்கின்றது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிகுந்த போக்குவரத்து வருகின்றது. இந்த கடை வீதி அருகே தான் பழைய பேருந்து நிலையம் இருக்கின்றது. இங்கு தற்பொழுது மழைநீர் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பணியானது சென்று ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைநீர் வடிகால் பணிக்காக குழி தோண்டப்பட்டு கான்கிரீட் போடும் பணியானது பகலில் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகையால் போக்குவரத்து இல்லாத நேரங்களிலும் இரவு நேரங்களிலும் மழைநீர் வடிகால் பணியை செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் போக்குவரத்தை சீரமைக்க காவலர்களை நியமிக்க வேண்டும். அதிலும் கடைவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வாகனம் நிறுத்த இடவசதி செய்து தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Categories

Tech |