Categories
உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து….. 9 பேர் உயிரிழப்பு…. 40 பேர் படுகாயம்….. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!

தெற்கு மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு பயணிகள் பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு மாநிலமான சியாபாசில் உள்ள சிவில் பாதுகாப்பு அலுவலகம் கூறியது, கார்பஸ் கிறிஸ்டின் விருந்து நிகழ்ச்சியில் பயணிகள் கலந்து கொண்டு, தபாஸ்கோ மாநிலத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அதிகாலை 5.30 மணிக்கு இந்தப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தபாஸ்கோ சேர்ந்த யாத்ரீகள் என்றும் மழை காரணமாக சாலை ஈரமாக இருந்த நிலையில் ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காயமடைந்த 40 பேரில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சேவைகள் வருவதற்கு முன் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பேருந்து பயணிகளுக்கு முதலுதவி செய்தனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |