Categories
மாநில செய்திகள்

10, 12th பொதுத்தேர்வு முடிவுகள்: அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிவடைந்தது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன்20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tn result.nic.in, www.dge 1.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வெளியிட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Categories

Tech |