Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவல்….. “தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார் .

அப்போது அவர் கூறியதாவது “தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அதிக பாதிப்பு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சிகிச்சைக்காக 400 படுகைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 2,3 சதவீதத்தில் உள்ளது. இவை அதிகரிக்கும் பட்சத்தில் கட்டாயம் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |