Categories
மாநில செய்திகள்

2 மாவட்டங்களில் ஊரடங்கா?….. இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா உச்சம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று ஒரு நாள் மட்டும் 208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னை 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும், கோவையில் 39 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 35  பேருக்கும், குமரி மாவட்டத்தில் 20 பேருக்கும், காஞ்சி மாவட்டத்தில் 15 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் பாதிப்பு உச்சத்திலிருக்கும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |