பிரபல நடிகரின் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி காந்தின் 169-வது திரைப்படத்தின் தலைப்பு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரஜினியின் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதன்பின் பிரியங்கா அருள் மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் நெல்சன் திலிப்குமர் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் தோன்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு நடிப்புக்கு குட்பை சொல்லி இருக்கிறார். மேலும் படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.