செவெரோடொனட்ஸ்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
கிழக்கு உக்ரைன் நாட்டில் செவெரோடொனட்ஸ்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 80% நிலப்பரப்பை ரஷ்ய ராணுவ படையினர் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு சிக்கி தவித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநா செய்தி தொடர்பாளரிடம் கூறியதாவது, “செவெரோடொனட்ஸ்க் நகரில் சிக்கியுள்ள பொதுமக்களில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அஸோட் ரசாயன ஆலையில் இருக்கும் சுரங்க பாதையில் 500 பேர் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை மோசமடைந்துள்ளதால் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.