கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சர்வதேச கடலோர துப்புறவு நாள் 2022 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு டெல்லியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், 75 நாட்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இதனையடுத்து சுற்றுச்சூழல், கடற்கரை மற்றும் காலநிலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடலோர தூய்மைப்பணி இயக்கம் இதுவரை இல்லாத மிகப் பெரிய இயக்கமாக இருக்கும் என்றார்.
அதன்பிறகு கடற்கரை தூய்மை இயக்கத்தில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். இந்த இயக்கத்தின் லட்சியம் கடற்கரைகளில் இருந்து 1,500 டன் குப்பைகளை வெளியே அகற்றுவதாகும். இந்த நடவடிக்கைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் எனவும் அமைச்சர் கூறினார். இந்த பணி ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கப்படும்.