ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் எளிதாகப் பெறுவதற்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் அறிமுக படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதுபோக ஓய்வூதியதாரர்களுக்கு வேறு சில அறிவிப்புகளையும் பென்சன் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். அதன்படி ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்ஷன் நலத் துறை சார்பில் விரைவில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த இணையதளத்திற்கு பாவிஷ்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த இணையதளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணி ஓய்வு பெறும் மூத்த குடிமக்களுக்கு தானாகவே கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையதளத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் தொடர்பில் இருக்கும் எனவும் அவர்களின் கருத்துக்கள், குறைகள் போன்றவை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்சன் செயலாக்கம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் செலுத்துவதை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்த இணையதளம் பயன்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் பணி ஓய்வு பெறும் குடும்பங்களுக்கு பென்சன் குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் இந்த இணையதளம் பயன்படும் என்று மத்திய பென்ஷன் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.