Categories
மாநில செய்திகள்

குழந்தை திருமணம்….”2 வருடத்தில் 192 வழக்குகள் பதிவு”…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!!!!

கடந்த இரண்டு வருடங்களில் 192 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில் சமூகவலைத்தளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிப் பருவத்திலேயே பருவ கோளாறால் மாணவ-மாணவியர் பலரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். கோவை மாவட்டத்தில் 2019 – 20 ஆம் வருடம் வரை குழந்தைகள் திருமணம் 100 க்கும் குறைவாகவே இருந்துள்ள நிலையில் தற்போது கொரோனாவிற்கு  பின் 2020 ஆம் வருடம் 146 நடப்பாண்டு மே மாதம் வரை 46 என 192 குழந்தை திருமண புகார்கள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் பேசியபோது பள்ளி பருவத்தில் ஏற்படும் காதல், குடும்பங்களின் வறுமை, பெற்றோர் பாதுகாப்பு இல்லாத குழந்தைகளே  பெரும்பாலும் குழந்தை திருமணங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். இதில் பெற்றோர் செய்து வைத்த திருமணத்தை விட காதல் திருமணம் செய்தவர்களே அதிகமாக இருக்கின்றனர். அதிலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொண்டு அதன் பின்  திருமணம் செய்த வேதனைக்குரிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. 2021ல் 146 குழந்தை திருமணங்கள் ரிப்போர்ட் ஆகியுள்ளது. நடப்பு ஆண்டில் மே மாதம் வரை 46 குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்திருக்கின்றோம்.

மேலும் குழந்தை திருமண சட்டப்படி சம்பந்தப்பட்ட மணமகன், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மண்டப உரிமையாளர்கள் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த  குற்றத்திற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவிகள் மட்டுமல்லாமல் மாணவர்களிடமும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமண தடைச் சட்டத்தின் படி பெண்ணுக்கு 18 வயதும்,  ஆணுக்கும் 21 வயதும் பூர்த்தி அடைய வேண்டும். இந்த வயது பூர்த்தியாகாமல் நடைபெறும் அனைத்து திருமணங்களும் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் திருமணத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைவரின் மீது வழக்கு பதிவு செய்யப்படுகின்றது.

Categories

Tech |