தமிழகம் முழுவதும் அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் UG, PG மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை கல்லூரியின் prospectus- இல் வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் கட்டணம் வசூலிக்க வேண்டும்.ஒவ்வொரு படிப்பிலும் ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டுமென உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சேர்க்கை முழுவதும் மெரிட் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து சேர்க்கை வழங்கிட வேண்டும். ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டுபிறகு இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில் 30%-க்கு மேல் பெண்களை சேர்க்கக் கூடாது. இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் மறுக்கப்படக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.