Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. விரைவில் பென்சன் தொகை உயரும்…..சூப்பர் தகவல்….!!!!

ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகையை, உயர்த்தும்படி பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் ஊழியர்களுக்கு, தொழிலாளர் பென்சன் திட்டம் (1995) இன் படி , தற்போது குறைந்தபட்ச தொகையான 1000 ரூபாய் மட்டுமே பென்சன் தொகையாக கிடைக்கிறது. இதையடுத்து  2000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் உள்ளது. மேலும் விலைவாசி உயர்வு, நிதி நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில், மூத்த குடிமக்களுக்கு இந்த பென்சன் தொகையானது போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கான பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை ஒன்றையும் விடுத்து வருகின்றனர். ஆனால் இது பற்றி, இதுவரையில் மத்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ஆகவே இப்போது குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்துவதற்கான கோரிக்கைகளும்  வலுத்துள்ளன. மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இது குறித்து பொருளாதார ஆலோசனைக் குழு சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறைந்தபட்ச பென்சன் தொகை 2000 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பென்சன் தொகை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் , ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஊழியர்களுக்கான பென்சன் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதோடு, யுனிவர்சல் பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போதைய நிலையில், குறைந்தபட்ச 1000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. எனவே தொகையை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இந்த முடிவை, அரசு விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இந்த விஷயத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும், இறுதி முடிவினை எடுக்க வேண்டும். இவ்வாறு அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அமைப்பு சாரா துறையினர், புலம்பெயர் தொழிலாளர்கள், பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களுக்கு  திறன் பயிற்சிகள் கிடைப்பது சிரமமான ஒரு விஷயம் ஆகும் . எனவே இந்த விஷயத்தில் அரசு சரியான கொள்கை முடிவை உருவாக்க வேண்டும் என்ற கருத்தும்  உள்ளது.

Categories

Tech |