Categories
மாநில செய்திகள்

லட்சங்களில் வருமானம்…. “ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு”….. கழுதை பண்ணை தொடங்கிய நபர்….!!!!

பெங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு இளைஞர் ஒருவர் கழுதை பால் பண்ணை ஒன்றை தொடங்கியுள்ளார்.

மங்களூர் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணையை திறந்துள்ளார். தற்போது 42 லட்சம் ரூபாய் முதலீட்டில் 20 கழுதையுடன், கழுதை பால் பண்ணை திறந்து கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் தெரிவித்ததாவது: “நான் 2020 வரை ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து, தற்போது கழுதை பால் பண்ணை தொடங்கியுள்ளேன். இது இந்தியாவிலும், கர்நாடகாவிலும் முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையமாகும். கழுதை பயிற்சி மையங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த யோசனை எனக்கு தோன்றியது. இந்த யோசனையை மக்கள் ஆரம்பத்தில் நம்பவில்லை. எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. சுமார் 42 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்துள்ளேன். மால்கள், கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த கழுதை பால் பாக்கெட்டுகள் கிடைக்கும். ஏற்கனவே 17 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைத்துள்ளன” என்று கூறினார்.

Categories

Tech |