பீகாரில் ஆண் மருத்துவரை கடத்திச் சென்று கட்டாய திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் சத்யம் குமார். அந்த கிராமத்தில் உள்ள விஜய் சிங் என்பவர் இவரை தங்கள் வீட்டு பிராணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே வந்து சிகிச்சை அளிக்கும்படி அழைத்துச் சென்றுள்ளார். அதனை நம்பி சத்யம் குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது 3 பேர் அவரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் இளம்பெண் ஒருவருக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார். பெண்ணின் உறவினர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டு மிரட்டி திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் செய்வதறியாமல் விழித்த சத்யம் குமார் வேண்டா வெறுப்பாக அழுதுகொண்டே திருமணம் சடங்குகளை செய்தார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து அறிந்த அந்த மருத்துவரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பிகார் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் அதிக ஊதியம், சொத்து வைத்திருந்ததை அறிந்து அவரை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைத்ததாக பெண்ணின் தந்தை விசாரணையில் கூறியுள்ளார்.