பல்கலைக்கழக மானியக் குழு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படாத நிலையில் தற்போது தொற்று குறைந்ததால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவின்படி காலம் தாழ்த்தாமல் பாலியல் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு உயர்மட்ட கமிட்டி குழு நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன் மூலமாக மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். மேலும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் உயர் மட்ட கல்விக்குழு அமைக்கப்படாததாக வந்த புகாரின் அடிப்படையிலேயே மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மானியக் குழு அறிவித்துள்ளது.