மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்.பட்ஜெட் உரையில் அவர் பேசிய சாராம்சம் ,
இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின் ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத செலவில் சராசரியாக 4 சதவீதத்தை மிச்சப்படுத்தி உள்ளனர்.
நாட்டில் தற்போது 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் உருவாகியுள்ளனர். சரக்கு சேவை வரி அமலாகிய பிறகு ஒவ்வொரு குடும்பத்தின் 4 விழுக்காடு அளவிற்கு அன்றாடம் செலவு குறைந்துள்ளது.
வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை ஏப்ரல் மாதம் முதல் அறிமுகமாகும். நாடு முழுவதும் 40 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உலகின் ஐந்தாவது பொருளாதார சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது. சரக்கு சேவை வரி நாட்டை ஒருங்கிணைத்துள்ளது.