Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வு முடிவு வெளியீடு ஒத்திவைப்பு”…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1- ம் தேதி தொடங்கி 9-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20, நண்பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge’1tn.nic.in, www.dge2tn.nic.in, www.dgetn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் செல்போன் எண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |