Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு திக்குவாய் நெடுநாட்களாக இருக்கிறதா..?அதை எளிதில் சரி செய்து விடலாம்..

குழந்தைகள் பல நாட்கள் ஆகியும், வளர்ந்தும் சரியாக பேசவராத நிலையில் இருப்பார்கள், அவர்களுக்கு இவ்வாறு செய்தல் திக்குவாய் சரி ஆகிவிடும்…

நாம் பிறருக்கு சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது, ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப்படுத்த இயலாது போராடும் அவல நிலையை நாம் திக்குவாய் என்று கூறுகிறோம்.

திக்குவாய் பிரச்சினை என்பது உடல் நலனோடு மனநலமும் சேர்ந்த விசயம். 

நமது உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் அருமையான ஒத்திசைவு இருப்பதால் தான் நம்மால் சரியான படி நடக்க முடிகிறது, பேச முடிகிறது,
எழுத முடிகிறது.

திக்குவாய் ஏற்படும் வயது எது..?

பொதுவாக குழந்தைகள், 2 முதல் 5 வயதில்தான் பேச கற்றுக்கொள்கின்றனர். அப்போது அந்த கால கட்டத்தில் தான் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு திக்குவாய் முதன் முதலாக தோன்றுவது வழக்கம், சில சமயங்களில் மிகவும் அபூர்வமாக, இளமைப் பருவ காலத்தில் கூட திக்குவாய் ஏற்பட வாய்ப்புள்ளது.

திக்குவாய் ஏற்பட காரணங்கள்..

குழந்தைகளை பயமுறுத்தி வளர்த்தால் திக்குவாய் ஏற்பட அதுவே முதல் காரணம் ஆகும். அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இயல்பாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாத நிலைக்கு தனிமையில் அவர்களை இழுத்து செல்லும்.

குழந்தைகளின் பழக்கத்தில் உள்ள மாற்றங்களும் அவர்களை திக்குவாய்க்கு மாற்றக்கூடும். வீட்டில் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவணித்து தானும் திக்கித்திக்கி பேச கற்று கொண்டு விடுகிறது.

திக்குவாயக்கான பயிற்சிகள்..

பேசும் பயிற்சி அல்லது  பாடும்போது அடிவயிற்றில் இருந்து பாடல்களை உச்சரிப்பார்கள், ஆனால், பேசும்போது உதட்டில் மட்டுமே அசைவு இருக்கும், இதன் காரணமாக அவர்களின் பேச்சு திக்கும். இதற்கு மூச்சுப் பயிற்சி கொடுத்து நுரையீரலுக்கு காற்று செல்ல, வயிறை அசைத்து மூச்சுவிடச் செய்வதும் நல்லது.

எதிரொலி பேசும் பயிற்சி..

நாம் பேசுவதை, நாமே கேட்டு ரசித்துப் கேட்கும்  பயிற்சி. இதனால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திக்குவாய் பிரச்சனை விரைவில் குணமாக..

1. தினமும் 5 மிளகு சுவைத்து சாப்பிட்டால் திக்குவாய் குணமாகும்

2. தாமரை பூ இதழை தினமும் ஒன்று தின்ன சரியாகும்.

3. அதிகாலை வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று பால் அருந்தி வந்தால் திக்கிப் பேசுதல் குணமாகும்.

4. இலந்தை இலை அரைத்து சாறு பிழிந்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் திக்கிப் பேசுதல் குணமாகும்

5. வசம்புப் பொடியை அருகம் புல் சாற்றில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூளைக்கும், உடல் உறுப்புகளுக்குமான ஒத்திசைவு பலப்பட்டு திக்குவாய் குணமாகும்.

6. வல்லாரை கீரை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி கல்லிரலை பலம் ஆக்கும். கல்லீரல் பலம் அடையும் போது மூளை வலுவாகி நினைவாற்றல் திறன் அதிகரிக்கும்.

7. நினைவாற்றல் திறன் அதிகம் ஆகும்போது மூளைக்கும், உடல் உறுப்புகளுக்குமான ஒத்திசைவு சரியான விகிதத்தில் அமையும். இதன் மூலமாகவும் திக்குவாய் பிரச்சினை சரியாகி விடும்..

8. வில்வ இலைகளை காலையிலும், மாலையிலுமாக 5 அல்லது 6 இலைகளை எடுத்துக் கொண்டு நன்றாக மென்று சாற்றை விழுங்கி விட்டு 10 நிமிடங்கள் கழித்து சுண்டக் காய்ச்சிய பசும்பாலில் மிதமான சூட்டில் பனங்கற்கண்டு, சிறிது மஞ்சள் தூள் கலந்து அருந்தினாலும் திக்கு வாய் குணமாகுமாம்.

9. துளசி இலை கலந்த நீரை மண்பானையில் இரவு முழுக்க வைத்திருந்து மறுநால் இலைகளை எடுத்து விட்டு அந்த நீரை மட்டும் அருந்தினாலும் திக்குவாய் குணமாகும்.

10.தூதுவளைக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற மூலிகைக் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் உகந்தது.

11. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலின் நச்சுக்கள் எளிதில் அகற்றப் பட்டு உடல் நலம் பெறும். இதனாலும் மூளைக்கும், உடல் உறுப்புகளுக்குமான ஒத்திசைவு இணக்கமானதாகி திக்குவாய் குணமாகும்.

என்ன சாப்பிட்டால் திக்குவாய் குணமாகும்..

*நெல்லிக்காய்

*பாதம்

*உலர்ந்த டேட்ஸ்

 

Categories

Tech |