Categories
மாநில செய்திகள்

செல்போனில் ஆபாச வீடியோ… நண்பனின் மனைவியை மிரட்டி வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த தர்போக் உசைன் (28) மற்றும் அவருடைய நண்பர் காலித் ஹசன் (24) இருவரும் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். முன்பே திருமணமான தர்போக் உசைன், அதே மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி 2வது திருமணம் செய்து கொண்டு, குரோம்பேட்டை அழைத்து வந்து நண்பர் காலித் ஹசன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தார்.

இதனிடையில் நண்பனின் மனைவி என்று பாராமல் காலித் ஹசன் சிறுமி குளிப்பதை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார். அதன்பின் காலித் ஹசன்  சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காலித் ஹசனை கைது செய்தனர். அத்துடன் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த தர்போக் உசேனும் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |